top of page





எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் அகில லோகங்களையும் ஆக்கி, காத்து, தன்னிடம் ஒடுக்கி கொள்கிறார் என வேதங்கள் கூறுகின்றன. மனிதர்கள் அனைத்து வளங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ அவர் உருவத்தோடு திருக்கோவில்களில் எழுந்து அருளுகிறார். பக்தர்கள் வாழ்ந்து பின் பிறவியின் முடிவில் வைகுண்டம் அடைய ஆலயவழிபாடு மிகத் தேவையான ஒன்று. ஆகம சாஸ்திரங்களுள் ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்திரம் மிக உயர்வானது.

ஆலயவழிபாட்டு முறைகளை வேத சாஸ்திரங்கள் 'ஆகமங்கள்' மூலம் வகுக்கின்றன. பல ஆகமங்களில் முதன்மையானது "ஸ்ரீ வைகானச பகவத் சாஸ்த்ரம்', இது பகவானின் இதயத்திலிருந்து தோன்றிய ஸ்ரீ விகனச முனி என்பவரால் இயற்றப்பட்ட அருமையான ஒன்று. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் பிரம்மாவை படைத்த பின்னர், நான் பூலோகத்தில் ஆலயங்களில் அவதரித்து மக்களுக்கு அருள் புரிவேன், என்னை ஆகம வழிமுறைகளை உருவாக்கி ஆராதியுங்கள் என்றார். ஆனால், பிரம்மா மற்றும் பல ரிஷிகளும் அது எங்களால் தவறின்றி செய்ய முடியாது எனத் தயங்கினர் , அதனால் பகவான் தன் மனத்திலிருந்து ஸ்ரீ விகனஸ மகரிஷியை தோற்றுவித்து, அவருக்கு அனைத்து வேத சாஸ்த்திரங்களையும் தாமே உபதேசித்தார். மேலும் விவரங்கள் ஸ்ரீ விகனஸ உத்பத்தி சரித்திரம் என்னும் பக்கத்தில் காண்க.
bottom of page

