
ஸ்ரீ வைகாநஸ கோயில்கள் பட்டியல்
ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் சமர்ப்பித்த விவரங்கள், இணையதளம் உண்மைத்தன்மைக்கு பொறுப்பல்ல.
ஸ்ரீ அலமேலுமங்கா ஸமேத ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் திருக்கோயில்
சுமார் 200 வருடம் பழமைவாய்ந்த திருக்கோயில், திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் தீர்த்த பரிக்கிரகம் ஆகப்பெற்ற கோயில், வரப்ரசாதி
பிரம்மோற்சவம், பவித்ர உத்ஸவம், பகல்பத்து, இராப்பத்து உத்ஸவம், கோடைஉத்ஸவம், அன்னக்கூட உத்ஸவம், ஒருநாள் திருப்பதி வைபவம்
சென்ன கேசவ பெருமாள் கோவில் தேவஸ்தானம்
இந்த சென்ன கேசவ பெருமாள் திருக்கோயில் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு இப்போது இருக்கும் தலைமை செயலகம் உள்ள இடத்தில் இருந்தது . பிரிட்டிஷ் காரர்கள் கோயிலை இடிக்க முயல்வது தெரிந்து அவர்களிடம் திவானாக இருந்த இப்போது இருக்கும் பரம்பரை தர்மகர்த்தா வுடைய முன்னோர் அங்கிருந்த ஸ்வாமி களை தற்போது கோயில் இருக்கும் இடத்தில் கொண்டு வந்து வைத்து ப்ரதிஷ்டை செய்து கோயில் கட்டி இது வரையிலும் அவர்கள் வம்சத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.முன்பு மொகலாய காலத்தில் ஹைதர் அலி என்ற மன்னன் ஆட்சி யில் கோயிலில் உள்ள விக்கிரகங்களை கொள்ளை அடிக்க முயல்வது தெரிந்து அங்குள்ள விக்கிரகங்களை பாதுகாக்க எடுத்து சென்று பல்லாவரம் அடுத்த திருநீர்மலை என்னும் மலையில் ஒரு இடத்தில் ஒளித்து வைத்தார்கள்.பின்பு மொகலாய காலம் முடிந்ததும் மறுபடியும் விக்கிரகங்களை அங்கிருந்து எடுத்து வந்து வைக்கும் போது பெருமாள் உற்சவர் மாறிவிட்டது தெரியவந்தது.இது நம் சென்ன கேசவன் இல்லை அங்கிருந்த சாந்தந்ருஸிம்மர் என்று தெரிந்தது இந்த நரஸிம்மர் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் ஆனவர் அப்பேற்பட்ட பெருமாள் இங்கு வந்தது பெருமாள் திருவுள்ளம் நம் பாக்கியம்.என்று அப்படியே ப்ரதிஷ்டை ஆகியது.அதனால் இது அபிமான ஸ்தலமானாலும் திவ்ய தேச எம்பெருமாள் ஏள்ளிஇருப்பதால் இங்கு வந்து தரிசிப்பதால் திவ்ய தேசம் சென்ற பலனை அடையலாம்.
ப்ரஹ்மோற்சவம்.வஸந்தோற்சவம்.பவித்தோற்சவம்.நவராத்திரிஉற்சவம்.பகல்பத்து.இராப்பத்து.வைகுண்ட ஏகாதசி.ஆழ்வார் ஆச்சாரியார் சாற்றுமுறை உற்சவங்கள்.தவன உற்சவம்.பங்குனிகல்யாணோற்சவம் போன்ற பல விஸேஷ உற்சவங்கள் நடைபெறும்.

