
ஸ்ரீ வைகாநஸ கோயில்கள் பட்டியல்
ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் சமர்ப்பித்த விவரங்கள், இணையதளம் உண்மைத்தன்மைக்கு பொறுப்பல்ல.
ஶ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்வாமி திருக்கோயில்
தானுகர்ந்து வீற்றிருக்கும் திருத்தலம்.பல நுறு ஆண்டுகளாக குளத்திலே இருந்த பெருமாள் பக்தர் ஒருவரின் சொப்பணத்திலே தோன்றி இன்னும் சில ஆண்டுகளிலில் இக்குளம் வற்றவுள்ளதாகவும் அதற்குள் தன்னை வெளிக்கொணர்ந்து தற்போது இருக்கும் இடத்தில் ப்ரதிஷ்டை செய்யும்படியும் சாதித்தார்.அவ்வாரே அவ்விடம் சென்று பார்க்க மஹாலக்ஷ்மியோடு இனைந்து ஶ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹனாக சேவைசாதித்தார்.
ந்ருஸிம்ஹ ஜெயந்தி,ஆனி ஸ்வாதி ஸுதர்ஸந ஹோமம்,புரட்டாசி நவராத்திரி,கார்த்திகை தீபம் / பவித்ரோத்ஸவம், தனுர்மாதம் 30 நாள்,தை மாட்டுப்பொங்கல் பார்வேட்டை உத்ஸவம்,மாசி சித்திரை ஸம்வத்ஸர மஹோத்ஸவம் (ம) திருக்கல்யாண வைபவம்.
ஆதி ஜெகநாதன் பெருமாள்
108 திவ்ய தேசங்களில் 44 ஷேத்தி ரம் திருமங்கை ஆழ்வாரால் 20 பாசுரம் பாடப்பட்ட ஷேத்திரம் ராமர் பிறப்பதற்கு தசரதர்கு வரம் அருளிய புல்லாரண்ய ஷேத்திரம் புல்லவர்,கன்வர், காலவர் என 3 மகரீஷிகள் தவம் செய்து அவர்களுக்கு பெருமாள் பிரத்யகஷம் வடக்கே பூரி ஜெகன்நாதர் இங்கு தக்ஷின ஜெகன்நாதர் தர்பாயை ஆசனமாக கொண்டு பெருமாள் வீட்றிருந்த திருக்கோலம் இராமர் இங்கிருந்துதான் சேதுபந்தனம் செய்து இலங்கை சென்றார் ராமர் தர்பையை ஆசன மாகக் கொண்டு சயனத்திருக்கோலத்தில் இருந்து 3 நாட்கள் சமுத்திர ராஜனை வேண்ட அவர் வராத கோபங்கொண்டவுடன் சமுத்திரராஜன் பத்னி சமேதரராய் சரணாகதி விபீசணன் சரணாகதி இராவண தூதர்கள் சுகன் சாரணர் சரணாகதி ஆக 4பேர் சரணாகதி ஷேத்திரம் புத்திர பாக்கியம் வேண்டியவர்கள் இங்கு பிராத்தனை செய்தால் உடனே பலன்அருளும் பெருமாள் பெருமாளுக்கு தெய்வச்சிலையான் என திருமங்கையாழ்வார் பெயரிட்டு அழைத்தார் 74 சதுர் யுகங்களாக இச் ஷேத்திரம் இருப்பதாக பல புராணங்களில் கூறப்பட்டுள்ளதுமிக பழமையான ஷேத்திரம் தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் மூன்றும் சேர்ந்து இருப்பது இங்கு விஷேஷம் வாருங்கள் வந்து சேதுவையும் ஜெகன்நாதரையும் தர்ப்பசயணராமரையும் கண்டு அனுபவித்து மகிழுங்கள் ஜெய் ஸ்ரீராம் சேதுக்கரையில் கடலை நோக்கி கையை ஓங்கிய படி எங்கும் காணமுடியாத ஜெய வீர ஆஞ்சநேயர் உள்ளார்
பங்குனி மாதம் பெருமாளுக்கும் சித்திரை மாதம் ராமருக்கும் நவ தின உத்ஸவம் தீர்தம் விஷேஷம் சேதுக்கரை ராமர் இங்கிருந்து இலங்கை செல்ல பாலம் அமைத்ததால் சேதுவை கண்ணால் கண்டால் கொடிய பாபம் தீரும் ஆடி அம்மாவாசை தைஅம்மாவாசை மற்றும் மகாளபட்ஷ அமாவாஸ்யை களில் பிதுர்களுக்கு தீர்த்தமாடி பிதுர்கடன் செய்தால் காசி கயாவில் செய்வதை விட பன்மடங்கு விஷேஷம் ஆதலால் மக்கள் அதிகம்பேர் இந்நாட்களில் கூடுவர்

